திருக்குறள் - வான் சிறப்பு - குறள் - 17


 


குறள் 17:


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்


மு. உரை:

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்


சாலமன் பாப்பையா உரை:

பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்


கலைஞர் உரை:

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்


என் கருத்து:

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்’, அதாவது மிகப்பெரிய கடலும் தன் இயல்பில் இருந்து குறைபடும். எப்பொழுது குறைபடும்?


தடிந்தெழுலி தான் நல்காவிடின், என்கிறார். தடிந்தெழுலி என்றால் திரளாக கடலில் இருந்து எழுந்தது; அதாவது, பெரும் கார் மேகம். கடலில் இருந்து கிளம்பிய கார்மேகம், நீரை கொடுக்காமல் இருந்து விட்டால்.


அதாவது,


திரளாக பெரும் கார் மேகமாக கடலில் இருந்து எழுந்த மேகமானது, நீரை கொடுக்காமல் போனால் அந்த கடலும் கடலுள் வாழும் உயிர்களும் அழிந்து போகும்.


Comments

Popular posts from this blog

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

இரத்ததில் பொறித்துவிட்டான்!

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 8.