திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 10

 


குறள் 10:


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்


மு. உரை:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது


சாலமன் பாப்பையா உரை:

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்




கலைஞர் உரை:

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.


எனது எண்ணம்:


பிறவியாகிய பெருங்கடலை நீந்த நிறைய பலம் வேண்டும். தொடர்ந்து நீந்த தைரியமும் மனப்பக்குவமும் வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு ஆற்றை கடப்பது போல் சிறு தூரம் நீந்துவது அல்ல.


கடலை போல் நீண்ட போராட்டத்தை ஒட்டி நடப்பது வாழ்க்கை.


இறைவன் என்பது இறை + அவன் என்று பிரித்து பார்ப்போம். இறை என்றால் தலைவன். தலைவன் அவன் என்பதையே, நாம் இறைவன் என்கிறோம். நீண்ட பயணத்தின் போது நமக்கு நம்பிக்கையை கொடுக்க இறைவன் அல்லது தலைவன் தேவை. இறைவன் இருக்கிறான் என்கின்ற நம்பிக்கையே நம்மை இந்த பிறவி பெருங்கடலை நீந்த துணை நிற்கும்.


அடி சேராதார்என்றால் அவர் அடிகள் காட்டும் வழியில் செல்வது. அவர் பின்னால் செல்லுவது.


இதை தான் வள்ளுவர், பிறவியாகிய பெரிய கடலை நீந்தி வெளியே வர, நாம் இறைவனின் அடிகள் காட்டும் வழியில் செல்ல வேண்டும். அப்படி செல்லவில்லை என்றால் அவர்களால் நீந்தி கடக்க முடியாது.

Comments

Post a Comment

Popular posts from this blog

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 4

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

இரத்ததில் பொறித்துவிட்டான்!