திருக்குறள் - வான் சிறப்பு - குறள் - 16
குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
மு.வ உரை:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
சாலமன் பாப்பையா உரை:
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்
கலைஞர் உரை:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்
என் கருத்து:
விசும்பு என்பது மேகத்தை குறிக்கும் சொல். விசும்பல் என்றால் சிறு சத்தத்துடன் அழுவது. விசும்பு என்பன சிறு சத்தம் செய்யும் மேகங்கள். மேகங்கள் பேர் இடி சத்தத்தோடு வரும். இவை கீழே அருகாமையில் இருக்கும் மேகங்கள். மேலே உயரத்தில் இருக்கும் மழை கொடுக்கும் மேகங்களோ, சிறு உருட்டல் சத்தத்துடன் தான் இருக்கும்.
இவைகளே விசும்பு எனப்படும் மேகக்கூட்டங்கள்.
அதே சமயத்தில் இந்த விசும்பு மேகங்கள், கார்மேகங்களாய் நீரை கொட்டி தீர்க்கும் மேகங்கள் அல்ல. கொஞ்சமாகத்தான் இவைகள் மழை பெய்ய செய்யும்.
ஆனால் இவைகளிடம் ஒரு சிறப்பு உண்டு! இன்றைய அறிவியல் கூறுவது என்னவென்றால், உயரத்தில் நைட்ரெஜன், மழை நீரோடு இணைந்து நைட்ரிக் அமிலமாக பூமிக்கு வந்து, செடி கொடிகளுக்கு தேவையான உரங்களை கொடுக்கிறது!
அதனால்தான் வள்ளுவர் சொல்லுகிறாரோ, அந்த மேகங்களில் இருந்து மழை கொட்ட வேண்டாம். துளிகள் போதும்.
அப்படி அந்த துளிகள் வரவில்லை என்றால், பசும் புல் தலை எடுப்பது கடினம் என்கிறார். ஒரு வேளை சாதாரண புல் வரலாம். சத்துடன் கூடிய நல்ல பசும் புல் வருவது கடினம். ஒரு சில வரலாம்! பசும் புல் வரவே வராது என்று சொல்லவில்லை. வார்த்தைகளை எவ்வளவு நுணக்கமாக உபயோகப்படுத்தி இருக்கிறார்! வருவது அரிது என்கிறார்!
எவ்வளவு அழகாக கூறி இருக்கிறார்!
இந்த குறளை நாம் இப்படித்தான் அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.
மழை கொடுக்கும் மேகங்களில் மிக உயர்த்தில் இருக்கும் மேகங்களான விசும்பு எனப்படும் மேகங்களில் இருந்து மழை துளிகள் விழவில்லை என்றால் பசுமையான சத்து உள்ள புல் கூட தலை எடுப்பது அரியது!
Comments
Post a Comment