திருக்குறள் - வான் சிறப்பு - குறள் - 11


 

வான் சிறப்பு


தமிழ் பண்பாட்டின் இணை பிரியாத ஒன்று, சூரியன்! கதிரவனை வள்ளுவர் மறந்துவிட்டாரா?


அப்படி இருக்க வாய்ப்பில்லை. சூரியனை கடவுளாகவே மக்கள் மதித்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. அப்படி இருக்க வள்ளுவர் சூரியனை பற்றி ஒன்றுமே எழுதி இருக்க மாட்டாரா


வான்சிறப்பு என்பது வானத்தை பற்றியது என்றே எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, அது மழையின் சிறப்பு என்று என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை


வான் என்கின்ற பொழுது அது மழை மட்டும் அல்லாமல், சூரியன் மற்றும் வானில் இருக்கும், இருந்து வெளிப்படும் அத்தனை விஷயங்களை சேர்த்து பார்க்க வேண்டும் என்பது என் கருத்து.


இந்த எண்ணத்துடன் தொடர்ந்து படியுங்கள்!



குறள் 11:


வானின் றுலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று


மு. உரை:

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்


சாலமன் பாப்பையா உரை:

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்


கலைஞர் உரை:

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது


என் கருத்து:


வானில் இருந்து இந்த உலகிற்கு பல விதமான 'உணவு' கிடைக்கிறது. சூரியனில் இருந்து வரும் ஒளி, மழையில் இருந்து கிடைக்கும் நீர், நட்சித்திரங்கள், சந்திரன் என்று எத்தனை வகையான, உலகத்தை வாழ வைக்கும் வணக்கத்திற்கு உரியவைகள்!


தானமிழ்தம்என்று சொல்லும் பொழுது அதனை அமிழ்தமாக கொண்டதால் தான் இந்த உலகம் அழிவு இல்லாமல் வாழ முடிகிறது!


அதாவது,


வானில் இருந்து உலகிற்கு கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் மழை போன்றவைகள் உலகிற்கு அமிழ்தமாய், இந்த உலகை அழிவில்லாமல் வாழ வைக்கிறது.


Comments

Popular posts from this blog

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 4

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - முதல் குறள்.

இரத்ததில் பொறித்துவிட்டான்!