திருக்குறள் - வாய்மை - குறள் - 292
குறள் 292: பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் மு . வ உரை : குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும் . சாலமன் பாப்பையா உரை : குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் . கலைஞர் உரை : குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும் எனது கருத்து : இந்த குறளை போல் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்ட குறள் வேறு இல்லை என்றே சொல்ல வேண்டும் ! தமிழில் அக்காலத்தில் கேள்விக்குறிகளோ , ஆச்சரிய குறிகளோ , முற்றுப்புள்ளிகளோ இருக்கவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் . பொய்மையும் வாய்மை இடத்து - பொய்யும் உண்மையாகலாம் , என்கிறார் . எப்பொழுது ? புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனில் . அதாவது , புரை இல்லாத நன்மை . புரை என்றால் என்ன ? கண்ணில் புரை விழுந்து விட்டது என்றால் பார்வை மங்கலாகிவிடும் . புரை என்றால் ஏதாவது ஒரு குற்ற...