ஏழறிவு
ஐந்து அறிவு மிருகம்!
அதிலிருந்து பிறந்ததடா
ஆறறிவு மனிதன்!
பரிணாம வளர்ச்சிகள்
மனிதன் பிறந்த பின்னாலே
நின்றாவிட்டது?
இயற்கை என்றுமே வளரும்!
ஒர் அறிவு ஈர் அறிவு ஆகும்!
ஈர் அறிவு மூன்று அறிவு ஆகும்.
மூன்று நான்காகும், நான்கு ஐந்தாகும்!
பல மிருகங்கள்
ஐந்தறிவு ஆனப்பின்னாலே
ஆறு அறிவும்
பிறந்ததடா!
மனிதன் ஒருவனே ஆறாய் நிற்கின்றான்!
பல மிருகம் ஐந்தறிவாய் இருக்கும்
பொழுது,
ஆறறிவு மிருகங்களும்
பலவாக வேண்டுமே!
பரணாம வளர்ச்சி
தொடராமல் நிற்குமா?
ஆறறிவு மிருகங்கள்
பலவாக வந்தப்பின்னே
ஏழறிவு பிராணிகளும்
நடக்கும் இம்மண்ணிலே!
ஏழு அறிவு என்பது
எப்படி இருக்கும்,
யாருக்கு தெரியும்?
வந்த பின்னாலே
மயக்கங்கள் தீரும்! நம்
வாழ்க்கையை கண்டிப்பாய்
விஞ்சும்!
Comments
Post a Comment