இரத்ததில் பொறித்துவிட்டான்!
நீ சின்ன முள்
நான் பெரிய முள்!
சுற்றி சுற்றி வருகிறோம்!
எதற்காக சுற்றுகிறோம்?
நமக்கென்ன தெரியும்?
நிமிடங்கள் புரியுமா,
மணி நேரம் தெரியுமா?
எல்லாமே
நமை படைத்த
மனிதனுக்காக!
என்னையும் உன்னையும் சேர்த்து
மணி சொல்லுவான் அவன்!
எனக்கோ உனக்கோ
நம் வாழ்க்கையில்
அர்த்தம் ஏது?
அதுப்போலத்தான்
பசித்தால் உண்கிறோம்.
மறித்தப்பின் பசியேது?
வாழ்வது எதற்கு?
வாழ்ந்தது எதற்கு?
ஆசையாய் இருந்தாலும்
ஆசையையே துறந்தாலும்,
மண்ணில் கரைந்தப்பின்னே
மனம் ஏது? குணம் ஏது?
மண்ணாங்கட்டித்தான் மிஞ்சுவது!
நீயும் நானும் படைக்கப்பட்டவர்கள்!
எப்படி புரியும் எதற்காக என்று?
கொன்று கொண்டும்
தின்று கொண்டும்,
வாழ வேண்டும்!
ஆண்டவன் கட்டளை!
எழுதி கொடுக்கவில்லை!
இரத்தத்தில் பொறித்து
சித்தத்தில் விட்டுவிட்டான்!
———————-
Comments
Post a Comment