Posts

ஏழறிவு

Image
  ஐந்து அறிவு மிருகம் ! அதிலிருந்து பிறந்ததடா ஆறறிவு மனிதன் ! பரிணாம வளர்ச்சிகள் மனிதன் பிறந்த பின்னாலே நின்றாவிட்டது ? இயற்கை என்றுமே வளரும் ! ஒர் அறிவு ஈர் அறிவு ஆகும் ! ஈர் அறிவு மூன்று அறிவு ஆகும் . மூன்று நான்காகும் , நான்கு ஐந்தாகும் ! பல மிருகங்கள் ஐந்தறிவு ஆனப்பின்னாலே ஆறு அறிவும் பிறந்ததடா ! மனிதன் ஒருவனே ஆறாய் நிற்கின்றான் ! பல மிருகம் ஐந்தறிவாய் இருக்கும்   பொழுது , ஆறறிவு மிருகங்களும் பலவாக வேண்டுமே ! பரணாம வளர்ச்சி   தொடராமல் நிற்குமா ? ஆறறிவு மிருகங்கள் பலவாக வந்தப்பின்னே ஏழறிவு பிராணிகளும்   நடக்கும் இம்மண்ணிலே ! ஏழு அறிவு என்பது   எப்படி இருக்கும் , யாருக்கு தெரியும் ? வந்த பின்னாலே மயக்கங்கள் தீரும் ! நம் வாழ்க்கையை கண்டிப்பாய் விஞ்சும் !

இரத்ததில் பொறித்துவிட்டான்!

Image
  நீ சின்ன முள் நான் பெரிய முள் ! சுற்றி சுற்றி வருகிறோம் ! எதற்காக சுற்றுகிறோம் ? நமக்கென்ன தெரியும் ? நிமிடங்கள் புரியுமா , மணி நேரம் தெரியுமா ? எல்லாமே நமை படைத்த   மனிதனுக்காக ! என்னையும் உன்னையும் சேர்த்து மணி சொல்லுவான் அவன் ! எனக்கோ உனக்கோ நம் வாழ்க்கையில்   அர்த்தம் ஏது ? அதுப்போலத்தான் பசித்தால் உண்கிறோம் . மறித்தப்பின் பசியேது ? வாழ்வது எதற்கு ? வாழ்ந்தது எதற்கு ? ஆசையாய் இருந்தாலும் ஆசையையே துறந்தாலும் , மண்ணில் கரைந்தப்பின்னே மனம் ஏது ? குணம் ஏது ? மண்ணாங்கட்டித்தான் மிஞ்சுவது ! நீயும் நானும் படைக்கப்பட்டவர்கள் ! எப்படி புரியும் எதற்காக என்று ? கொன்று கொண்டும் தின்று கொண்டும் , வாழ வேண்டும் ! ஆண்டவன் கட்டளை ! எழுதி கொடுக்கவில்லை ! இரத்தத்தில் பொறித்து   சித்தத்தில் விட்டுவிட்டான் ! ———————-

மானம்

Image
வீட்டில் நேற்று வரை கூட்டம் பொங்கி வழிந்து கொண்டு இருந்தது ! இன்று யாருமே இல்லை ! கங்காதரனுக்கு மனசு ரொம்ப வலித்தது . அதைவிட தோல்வி வலித்தது . மக்கள் ஏன் தனக்கு ஓட்டு போடவில்லை என்று எண்ணும் பொழுது , ஒரு வேளை எல்லாவற்றையும் நம்பி விட்டார்களா ? மூன்று முறை சட்ட சபை உறுப்பினர் ! பதினைந்து வருட காலங்கள் , எம் எல் ஏ என்று ஊரில் சொன்னால் அது கங்காதரனாக தான் இருக்கும் . இன்று முதல் வேறொருவன் ! தோல்வி , வெறும் தோல்வியாக இருந்தால் ஏற்று கொண்டு இருப்பாரோ என்னவோ . இப்படி டெப்பாசிட் கூட கிடைக்காமல் போனதில் ரொம்ப நொந்து போனார் ! இந்த ஊருக்காக எத்தனை நாட்கள் உழைத்து கொட்டி இருப்பார் ? இந்த பதினைந்து வருடங்களில் ஊரே மாறிப்போனது . புது மேம்பாலங்கள் , புதுப்பிக்கப்பட்ட இரயில் நிலையம் ; புது பேருந்து நிலையம் ! எத்தனை எத்தனை புதிதுகள் . எல்லாம் அவரின் , அல்லும் பகலும் அவர் உழைத்த உழைப்பின் , சின்னங்கள் . ஆனால் , அவரை போன்ற நேர்மையானவர்கள் யார் இருந்தார்கள் அதற்கு முன்னால் ? இல்லை பின்னால் தான் யார் இருக்கப் போகிறார்கள...

இரத்தக்கறை

Image
1. கஜினி முகமது அவையில் வீற்றிருக்கிறான் ! பல வெற்றிகளை கண்டவன் . தன் ராஜியத்தை மேற்கே யூபரட்டீஸ் நதிக்கரையில் இருந்து கிழக்கே சிந்து நதி வரை பரவச் செய்து இருந்தான் . தான் அடைந்த வெற்றியின் அடையாளமாக இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் சுல்தான் என்ற பட்டத்தை தரித்து கொண்டான் ! கஜினாவித் ராஜ்யத்தின் சுல்தான் முகமது ! வெகு கம்பீரமாக வீற்றிருந்த சுல்தான் முன்னால் காவலர்கள் ஒருவனை இழுத்து வந்தார்கள் . ‘ அல்லாவின் ஆசி பெற்ற கஜினாவித்தின் சுல்தானுக்கு அமைதி உண்டாகட்டும் !’ என்று கூவி விட்டு காத்திருந்தார்கள் .  முகமது அவர்களை பார்த்து கேட்டான் . ‘ இவன் செய்த தவறு என்ன ? எதற்காக இவனை இழுத்து வந்து இருக்கிறீகள் ?’ காவலன் ஒருவன் பதில் அளித்தான் : ‘ சுல்தான் , இவன் தான் உயர்ந்த பிறவி என்கிறான் . நாம் எல்லோரும் இவனுக்கு வணங்க வேண்டும் என்கிறான் ! கடைவீதியில் இன்று , இவன் வருகைக்கு வழிவிட்டு நிற்கவில்லை என்று அங்கே இருந்த ஒர் ஏழையை அடித்துவிட்டான் !’ சிரித்தான் முகமது . ‘ வெளி நாட்டானாக இருக்கும் . அவ...