திருக்குறள் - கடவுள் வாழ்த்து - குறள் - 3.
குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் மு . வ உரை : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் , இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் சாலமன் பாப்பையா உரை : மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர் கலைஞர் உரை : மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு , உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும் எனது பார்வை . மலர்மிசை ஏகினான் - மலர்களின் மேல் இருப்பவன் . மலர் மேல் யார் இருப்பார்கள் ? இறைவனை குறித்து சொல்லுகின்ற பொழுது , மலர் மேல் அமர்ந்து இருப்பவராகத்தான் பல இடங்களில் அவர் காட்டப்படுகிறார் . மலர்கள் தான் உயிரின் ஆரம்ப நிலை . அதாவது , மலர்களே காயாகி , பின் கனியாகி , விதையாகி , அதன் பின் மரமாகி , மிருகங்களுக்கு இரையாகி , அந்த மிருகங்கள் ஊண் உண்ணும் மிருகங்களுக்கு உணவாகி , தொடரும் இந்த உணவு சங்கிலியின் ஆரம்பம் என்று பார்த்தால் அது மலர...