Posts

Showing posts from September, 2022

ஏழறிவு

Image
  ஐந்து அறிவு மிருகம் ! அதிலிருந்து பிறந்ததடா ஆறறிவு மனிதன் ! பரிணாம வளர்ச்சிகள் மனிதன் பிறந்த பின்னாலே நின்றாவிட்டது ? இயற்கை என்றுமே வளரும் ! ஒர் அறிவு ஈர் அறிவு ஆகும் ! ஈர் அறிவு மூன்று அறிவு ஆகும் . மூன்று நான்காகும் , நான்கு ஐந்தாகும் ! பல மிருகங்கள் ஐந்தறிவு ஆனப்பின்னாலே ஆறு அறிவும் பிறந்ததடா ! மனிதன் ஒருவனே ஆறாய் நிற்கின்றான் ! பல மிருகம் ஐந்தறிவாய் இருக்கும்   பொழுது , ஆறறிவு மிருகங்களும் பலவாக வேண்டுமே ! பரணாம வளர்ச்சி   தொடராமல் நிற்குமா ? ஆறறிவு மிருகங்கள் பலவாக வந்தப்பின்னே ஏழறிவு பிராணிகளும்   நடக்கும் இம்மண்ணிலே ! ஏழு அறிவு என்பது   எப்படி இருக்கும் , யாருக்கு தெரியும் ? வந்த பின்னாலே மயக்கங்கள் தீரும் ! நம் வாழ்க்கையை கண்டிப்பாய் விஞ்சும் !

இரத்ததில் பொறித்துவிட்டான்!

Image
  நீ சின்ன முள் நான் பெரிய முள் ! சுற்றி சுற்றி வருகிறோம் ! எதற்காக சுற்றுகிறோம் ? நமக்கென்ன தெரியும் ? நிமிடங்கள் புரியுமா , மணி நேரம் தெரியுமா ? எல்லாமே நமை படைத்த   மனிதனுக்காக ! என்னையும் உன்னையும் சேர்த்து மணி சொல்லுவான் அவன் ! எனக்கோ உனக்கோ நம் வாழ்க்கையில்   அர்த்தம் ஏது ? அதுப்போலத்தான் பசித்தால் உண்கிறோம் . மறித்தப்பின் பசியேது ? வாழ்வது எதற்கு ? வாழ்ந்தது எதற்கு ? ஆசையாய் இருந்தாலும் ஆசையையே துறந்தாலும் , மண்ணில் கரைந்தப்பின்னே மனம் ஏது ? குணம் ஏது ? மண்ணாங்கட்டித்தான் மிஞ்சுவது ! நீயும் நானும் படைக்கப்பட்டவர்கள் ! எப்படி புரியும் எதற்காக என்று ? கொன்று கொண்டும் தின்று கொண்டும் , வாழ வேண்டும் ! ஆண்டவன் கட்டளை ! எழுதி கொடுக்கவில்லை ! இரத்தத்தில் பொறித்து   சித்தத்தில் விட்டுவிட்டான் ! ———————-