இரத்தக்கறை
1. கஜினி முகமது அவையில் வீற்றிருக்கிறான் ! பல வெற்றிகளை கண்டவன் . தன் ராஜியத்தை மேற்கே யூபரட்டீஸ் நதிக்கரையில் இருந்து கிழக்கே சிந்து நதி வரை பரவச் செய்து இருந்தான் . தான் அடைந்த வெற்றியின் அடையாளமாக இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் சுல்தான் என்ற பட்டத்தை தரித்து கொண்டான் ! கஜினாவித் ராஜ்யத்தின் சுல்தான் முகமது ! வெகு கம்பீரமாக வீற்றிருந்த சுல்தான் முன்னால் காவலர்கள் ஒருவனை இழுத்து வந்தார்கள் . ‘ அல்லாவின் ஆசி பெற்ற கஜினாவித்தின் சுல்தானுக்கு அமைதி உண்டாகட்டும் !’ என்று கூவி விட்டு காத்திருந்தார்கள் . முகமது அவர்களை பார்த்து கேட்டான் . ‘ இவன் செய்த தவறு என்ன ? எதற்காக இவனை இழுத்து வந்து இருக்கிறீகள் ?’ காவலன் ஒருவன் பதில் அளித்தான் : ‘ சுல்தான் , இவன் தான் உயர்ந்த பிறவி என்கிறான் . நாம் எல்லோரும் இவனுக்கு வணங்க வேண்டும் என்கிறான் ! கடைவீதியில் இன்று , இவன் வருகைக்கு வழிவிட்டு நிற்கவில்லை என்று அங்கே இருந்த ஒர் ஏழையை அடித்துவிட்டான் !’ சிரித்தான் முகமது . ‘ வெளி நாட்டானாக இருக்கும் . அவ...