Posts

Showing posts from July, 2021

மேற்கு தமிழகம்!

Image
  மேற்கு தமிழகம் , சரியா தவறா ? மாநிலங்கள் 1956 ல் திருத்தி அமைக்கப்பட்டது ! அப்பொழுது , பேசப்படும் மொழியை மட்டுமே கருத்தில் கொண்டு புது மாநிலங்கள் உருவாக்கப்பட்டன . மொழி வாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள் நல் ஆட்சியை கொடுக்க இந்த பிரிவு ஏதுவாக இருக்குமா ? அவைகளின் உள்ளே இருக்கும் உட்பிரிவுகள் , சிறுபான்மை அமைப்புகள் என்று பலருக்கும் நியாயம் கிடைக்குமா ? இப்படி எல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும் . காரணம் , அன்று அரசியலில் ஆகட்டும் , சமுதாயத்தில் ஆகட்டும் , பல பிரச்சனைகள் ஊரெங்கும் மண்டி கிடந்தன . அதனால் , நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பெரும் தேவையாகவும் , ஜனநாயகத்தை காப்பது முதல் கடமையாகவும் ஆட்சியாளர்களுக்கு இருந்து இருக்க வேண்டும் . அப்படி பட்ட நிலையில் மாநிலங்களை பிரிப்பது என்பது என்னவோ நாட்டை கூறு போடுவதைப் போல எண்ணிக்கொண்டு அவர்களை தண்டனைக்கு உரியவர்களாக பார்த்தது நாடு ! அதனால் தான் , மாநிலங்களை பிரிப்பது என்பது உணர்வுகளுடன் விளையாடுவது போல் நிகழ்ந்தது . உண்மையில் மாந...