சொர்க்கம்
சரோஜாவின் அம்மா அவளை முறைத்தாள்! ’ எத்தனை தடவைதான் நீ அழுதுகிட்டே வந்து நிப்ப , மடப்பொண்ணு!’ அவன் ஒரு கல் நெஞ்சுக்காரன். ரவுடி. காட்டான்! சின்ன வயசில் இருந்தே சரோஜாவிற்கு மாறனை தெரியும். நான்கு வீடுகள் தள்ளி அவர்கள் வீடு. அந்த சிறு சந்தில் இருந்த பத்து பதினைந்து பையன்கள் , இரண்டு மூன்று கூட்டங்களாக பிரிந்து விளையாடுவார்கள். பெண் பிள்ளைகளும் அப்படித்தான்! பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளோடு அதிகமாக விளையாட மாட்டார்கள். ஆனால் , சரோஜா எப்பொழுதும் மாறனை தேடிப் போய் அவனுடன் தான் விளையாடுவாள்! ஒவ்வொரு முறை அவனோடு விளையாடும் பொழுதும் கடைசியில் அவனிடம் அடி வாங்கிக் கொண்டு , அழுது கொண்டு தான் வீட்டுக்கு வருவாள்! அவ்வளவு அடிவாங்கிய பின்னும், அடுத்த நாள் மீண்டும் அவனை தேடிப் போவாள்! மீண்டும் விளையாட்டின் முடிவில் அவனிடம் அடிவாங்கிக் கொண்டுத்தான் கண்களில் நீர் தாரை தாரையாய் வழிய வருவாள்! கிறுக்கு புள்ள! அவள் அம்மா அங்கலாய்ப்பாள்! மாறன் ஒரு வகையில் சரோவிற்கு சொந்தம்தான். அவள் தந்தையின் பெரியப்பா மகளின் மகன். மாமன் தான் அவளுக்க...